காரில் பெண் டாக்டரின் எரிந்த சடலம்!!!
மராட்டியத்தின் நாசிக் நகரில் வசித்து வந்தவர் சுவர்ணா வஜே (வயது 35). இவரது கணவர் சந்தீப் வஜே. அரசு மருத்தவமனையில் டாக்டராக சுவர்ணா பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 25ந்தேதி மாலையில் இருந்து அவரை காணவில்லை.இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அன்றைய தினம் வாதிவர்ஹே பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் கருகிய சடலம் ஒன்று கிடந்துள்ளது. அது பெண் டாக்டர் சுவர்ணாவின் சடலம் என போலீசார் சந்தேகித்தனர். இதுபற்றிய மரபணு ஆய்வில் சுவர்ணாவின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. சுவர்ணா எரித்து கொல்லப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து உடல் மீட்கப்பட்டு உள்ளது.தீவிர விசாரணை நடத்திய போலீசார் ஒரு வாரத்திற்கு பின்பு அவரது கணவர் சந்தீப் வஜேவை நேற்று (வியாழ கிழமை) கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.