புற்றுநோயை தடுப்பது எப்படி – உலக புற்றுநோய் தினம்…
இன்று உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. துவக்க நிலையிலேயே கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டால் பெரும்பாலான புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்தலாம். புற்று நோயின் வகை, அதன் நிலை, வயது, உடல்நிலை ஆகியவற்றை பொறுத்து சிகிச்சை வழங்கப்படும். இதற்கு ஒரே சிகிச்சை என்பது இல்லை. ரேடியேஷன், கீமியோதெரபி, இம்மினோ தெரபி, ஹார்மோன் தெரபி, ஜென் தெரபி உட்பட பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்களிடம் பொதுவாக நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு, கல்லீரல் போன்ற புற்றுநோயும், பெண்களிடம் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பவாய், தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.