அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்மஸ் மின்னொளியை ரசிக்க ஏற்பாடு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் காருக்குள் பாதுகாப்பாக அமர்ந்தபடி கிறிஸ்துமஸ் மின்னொளி அலங்காரத்தை ரசிப்பதற்கு லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்குப் பின் முதல்முறையாக கிறிஸ்துமஸ் விளக்குகளைக் காண வெளியே வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

30 லட்சம் மின்விளக்குகளுடன் விடுமுறைக் கால இசையை இணைத்து அமைக்கப்பட்ட இந்த கிறிஸ்துமஸ் மின்விளக்குக் காட்சியை காண தொடர்ந்து பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

சுரங்க வடிவில் செல்லும் பாதையில் காரை ஓட்டியபடியே இந்த விளக்குகளை ரசித்தபடி வரும்போது 40 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரம் ஒன்று 8 ஆயிரம் எல்.இ,டி மின்விளக்குகளுடன் கண்களைக் கவர்ந்துவிடுகிறது.

ரஹ்மான்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.