இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது..
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூவர் மணப்பாறை போலீசாரால் கைது?
மணப்பாறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது 7 வாகனங்கள் பறிமுதல் மணப்பாறையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமைகாவல்துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில்இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர் இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு மணமேல்குடி க.ராஜேஷ்(26) .தானம் பட்டி கா.ராஜா (31) .கல்யானபுரம் பெ.நாகராசு (41) என்பதும் தொடர் வாகனத் திருட்டில் ஈடு பட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குபதிந்து மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
P.பாலு மணப்பாறை செய்தியாளர்.