இன்ஃபோசிஸ் நிர்வாகம் அறிவிப்பு !
இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் தேவைக்கேற்ப பணி புரியலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறையாமல் உள்ளதால் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது. எனவே ஒரு சில துறைகளை சேர்ந்தோர் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர். அதிலும் குறிப்பாக ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர். இந்நிலை ஜனவரி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி நெருங்குகின்ற இந்த நேரத்திலும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் உள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சலீல் பரேக், இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு நெகிழ்வான கலப்பின (flexible hybrid work model) வேலை மாதிரியை உருவாக்கியுள்ளது.
அதே வேளையில் இப்போது சமூக மூலதனத்தை உருவாக்குவதற்கான வேலைளைத் தொடங்குவதற்கான நேரம் ஆகும்.
நிலைமை எப்படி உருவாகிறது என்பதைப் பொறுத்து நிறுவனம் இதில் கவனம் செலுத்தும். எது எப்படி இருந்தாலும் பிளக்ஸிபிள் என்பது முக்கியமானதாக இருக்கும். அதாவது வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும். மேலும் நாங்கள் சமூக மூலதனத்தினை உருவாக்கத் தொடங்குகிறோம். அத்துடன் அலுவலக சூழலும் எங்களுக்குத் தேவை, எனவே நாங்கள் இன்னும் சரியான அணுகுமுறையை முடிவு செய்யவில்லை ‘என்று சலீல் கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நீலகனி, ‘கொரோனா தொற்று நோய் காலத்திற்கு முன்பே நாங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும் முறையைக் கொண்டு வந்துள்ளோம் என்பதால் கொரோனா தொற்றுக்குப் பின்பு இது மிகவும் எளிதாகி விட்டது. தற்போது 40 நாடுகளில் உள்ள 2,40,000 ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.
S. செந்தில்நாதன் இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.