நடிகை மீனாவின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா
குறிப்பாக கொரோனா இரண்டாம் அலையின் போது பல பிரபலங்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை மீனாவின் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ”2022 புத்தாண்டில் எங்க வீட்டுக்கு விருந்தாளியாக கொரோனா வந்துள்ளது. அது என் மொத்த குடும்பத்தை விட்டுவைக்கவில்லை, ஆனால் நான் அதை அப்படியே விடமாட்டேன். ஜாக்கிரதையாகவும், பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். உங்கள் பிரார்த்தனை எங்களை காப்பாற்றும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்தி ராகுல் தமிழ் மலர் மின்னிதழ்