மீண்டும் வழிபாட்டுத்தலங்கள் மூடல்? முதல்வர் தீவிர ஆலோசனை..
சென்னை: ஓமிக்ரான் அச்சம் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2ஆம் அலைக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குறைந்தே வந்தது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா வேக்சின் பணிகளால் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வரத் தொடங்கியது.
செய்தி ராகுல் தமிழ் மலர் மின்னிதழ்