விவசாயியை தற்கொலைக்கு தூண்டும் தனியார் பெண் அதிகாரி..
சென்னை: கடன் வாங்கிய விவசாயி ஒருவரை மிரட்டி கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி, விவசாயியைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசிய ஆடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர், ‘நீங்கள் இந்தியன் பேங்கில் கடன் வாங்கி உள்ளீர்கள்… அதை எப்ப கட்டப் போகீறார்கள்” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த விவசாயி, “இந்தியன் பேங்கில் தான் நான் கடன் வாங்கினேன். நீங்கள் எதற்காக என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்” என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருக்க அது அப்படியே வாக்குவாதமாக முற்றியுள்ளது. உடனே அந்தப் பெண் அதிகாரி, “யோவ்… நீ கடன் வாங்கிட்டு போவ.. யார் வந்து கேப்பாங்க.. முதல் நீ ஃபேங்குக்கு வா.. சட்டம் எல்லாம் பேசதா” என மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார்.
செய்தி ராகுல் தமிழ் மலர் மின்னிதழ்