பெண் வடிவிலான அரிய விநாயகர் சிலை

[14:41, 12/28/2021] Siranjeevi Anis: பெண் வடிவிலான அரிய விநாயகர் சிலை செங்கல்பட்டில் கண்டெடுப்பு!சென்னை அருகே பெண் வடிவிலான அரிய விநாயகர் சிலை  ஒன்று இந்திய தொல்லியல் துறை  குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொதுவாக தமிழ்நாட்டில் விநாயகர் பரவலாக வழிபட்டு வரும் நிலையில், தும்பிக்கையுடன் இருக்கக்கூடிய விநாயகி தேவியின் சிலை குறைவுதான். சென்னையில் கண்டிபிடிக்கப்பட்ட இந்த விநாயகியின் சிலை கிரானைட் கல்லால் செய்யப்பட்ட 3 அடி உயரம் கொண்ட சிற்பமாகும்இதேபோலவே அப்படியே இருக்கும் மற்றொரு சிற்பத்த மூன்று பேர் கொண்ட இந்திய தொல்லியல் துறை குழுவால் செய்யூர் அருகே இரும்பேடு என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சிலை கங்கை அம்மன் என்று அந்த கிராம மக்கள் கூறி வருகின்றனர்.  அதனால் இந்த இரண்டாவது சிற்பத்தை அடையாளம் காண்பதற்கான ஆய்வு இன்னும் நடந்து வருகிறது. மேலும் இந்த இரண்டு சிற்பங்களும் எந்த கோவிலிலும் வைக்காமல் பொதுவான இடத்தில் வைத்து வணங்கப்படுகின்றன.மேலும் இந்தக் சிற்பத்தில் ஒரே மாதிரியான மூன்று வாக்கியங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை,  ‘ஜெயம் பட்ட முத்திரவரிகன் மாடவதி’ ஆகும். வெற்றியின் அடையாளமாக ‘மாடவதி’ என்ற நபர் அவற்றை நன்கொடையாக அளித்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். இந்த சிற்பங்களில் உள்ள எழுத்துக்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள் ஆகும்.விநாயகப் பெருமானின் பெண் வடிவமான விநாயகி, வட இந்தியாவில் பெருமளவில் வழிபடப்படுகின்றனர். ஆனால் தெற்கில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் அரிதாகவே விநாயகி காணப்படுகிறார் என்று தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.உள்ளூர் மக்கள் சிற்பத்தை ‘விநாயகர்’ என்றுதான் வணங்குகிறார்கள். கல்வெட்டுகளுடன் கூடிய தனித்துவமான இந்த சிற்பங்கள் குறித்து விரைவில் இந்திய தொல்லியல் துறையின் (Indian Epigraphy of ASI) இந்திய எபிகிராபி பற்றிய ஆண்டறிக்கையில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.