7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு அதிரடி உத்தரவு
7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை : 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை அமலாக்கப் பிரிவின் மண்டல ஐஜியாக செந்தாமரைக் கண்ணனும், டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக பிராஜ் கிஷோர் ரவியும், சென்னை சைபர் கிரைம் பிரிவு 1ன் காவல் கண்காணிப்பாளராக சுதாகரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல் தலைமையக மண்டஜ ஐஜி ஜோஷி நிர்மலும், சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவின் துணைத் தலைவராக அமரேஷ் புஜாரியும், ஊனமாஞ்சேரி காவல் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சனும், காவல்துறை செயலாக்கப் பிரிவின் கூடுதல் தலைவராக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.