வீடெங்கும் தண்ணீர்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வரலாறு காணாத அளவுக்கு மழை இதனால் ஏரிகள் குலம் குட்டைகள் ஆறுகள் போன்றவை நிறம்பி வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள முருகன் கோயில் தெருவில் ஏரியில் நிறம்பி இருந்த தண்ணீர் ஊருக்குள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இழந்து உண்ண உணவில்லாமல் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மற்றும் மக்கள் கூறுகையில் 1994 ஆம் வருடம் தமிழக அரசு உதயேந்திரம் ஏரியோரம் உள்ள இடத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. மக்களாகிய நாங்களும் இயற்கையின் விபரீதம் தெரியாமல் வீடுகளை கட்டிக் கொண்டு குடியேறினோம் இப்போது வெள்ளக்காடாக மாறியிருக்கும் எங்கள் இருப்பிடத்தை தமிழக அரசு மற்றும் மாண்புமிகு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் ஐயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேறு ஒரு இடத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ். செய்திகளுக்காக. P.சுரேஷ்.