ஆபத்தை விளைவிக்கும் நகராட்சி குடிநீர் தொட்டி:

கொடைக்கானல் ஆபத்தை விளைவிக்கும் கொடைக்கானல் நகராட்சி குடிநீர் தொட்டி: கொடைக்கானல் அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகில் உள்ளது கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டி உள்ளது இந்த குடிநீர் தொட்டி இந்தக் குடிநீர் தொட்டி சரிவர பராமரிப்பு இல்லாத காரணத்தினால் குடிநீர் வீணாக செல்கின்றது இதனைத் தொடர்ந்து அருகில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்ட ஐந்து ரூபாய் குடிநீர் தொட்டியில் உள்ள மின் இணைப்பு சரிவர இணைக்கப்படாமல் அவ்வபோது சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் தண்ணீர் மூலம் மின்சாரம் பாயும் நிலை உள்ளது உடனே இதனை சரி செய்யப்படாமல் இருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தாக வந்து முடியும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சரி செய்யப்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளின் கருத்து .

செய்தி செல்வம் கொடைக்கானல்