IET இந்தியா உதவித்தொகை விருதுகள்
IET இந்தியா உதவித்தொகை விருதுகள் 2021-க்கான தேசிய அளவில் இறுதி வெற்றியாளராக சென்னை மாணவர்
சென்னை, அக்டோபர் 21, 2021: த இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இஞ்ஜீனியரிங் அண்ட் டெக்னாலஜி (IET), மதிப்புமிக்க IET இந்திய தேசிய உதவித்தொகை விருதுகள், 2021-க்கான மண்டலச் சுற்று வெற்றியாளர்களை அறிவித்தது.
120 மண்டல பங்கேற்பாளர்கள் 1400+ மாணவர்களின் தொகுப்பிலிருந்து கடுமையான ஆன்லைன் மதிப்பீட்டின் மூலம் மற்றும் அவர்களின் STEM அடிப்படைகளை சோதித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சுற்றில், உதவித்தொகை ஆலோசனைக் குழுவால் எழுப்பபட்ட முக்கிய சமூக ரீதியிலான சவால்களுக்கு நூதனமான பொறியியல் தீர்வுகளை முன்வைக்குமாறு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்கப்பட்டனர். இந்த ஆண்டில், கோவிட் -19 பெருந்தொற்றின் வழியாக உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை சமாளிக்க எதிர்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகிற்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஒரு பொதுப் போக்குவரத்தை உருவாக்குதல், போலிச் செய்திகளின் ஆதிக்கத்தை தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகள் இதில் அடங்கும்.
இந்த IET இன் 150 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் IET இந்தியா உதவித்தொகை விருதுகள் மீண்டும் இந்த ஆண்டு டிஜிட்டல் வடிவத்தில் தொடங்கப்பட்டது. IET இந்தியா உதவித்தொகை விருதுகளின் முந்தைய நான்கு பதிப்புகள் பொறியியல் சமூகத்திடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றன. 2013 முதல் 2016 வரை இந்தியா முழுவதிலுமிருந்து மொத்தம் 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன. மொத்தம் ரூ .32,00,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
செய்தியாளர் குமார்