சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக மனுக்கள்..
குளித்தலை நகராட்சி அலுவலகத்தில்..
மாண்புமிகு மின்துறை அமைச்சர்
வி.செந்தில்பாலாஜி அவர்களிடம் மக்கள் சபை நிகழ்ச்சியில்
குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக மனுக்கள் கொடுத்துள்ளனர்.
கோரிக்கைகள குளித்தலை நகரில்
தற்போது உள்ள இடத்தில் நவீன நகர பேருந்து நிலையமும் மக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் குளித்தலை நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கவும்.
2.குளித்தலை கல்வி மாவட்டத்தில் அனைத்து விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கவும்.
3.குளித்தலை கடம்பர் கோவில் ஆற்று பகுதியில் உயர் மின் கோபுரம் மின் விளக்கு அமைத்துக் கொடுக்கவும்.
மனுக்கள் கொடுத்து உள்ளனர்
மாண்புமிகு மின்துறை அமைச்சர்
வி.செந்தில்பாலாஜி அவர்களுடன் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய குளித்தலை இரா.மாணிக்கம் அவர்களும் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்..
- தமிழ்மலர் மின்னிதழ்
செய்தி சுந்தர்