பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

கோயம்பேடு புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் புறநகர் பேருந்து நிலையத்தில் நடக்கும் சில அவலங்கள். பல வருடங்களாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் போக்குவரத்து துறையின் பெருமிதமாக விளங்கும் இந்த பேருந்து நிலையத்தில் பல மேம்பாட்டு நிகழ்வுகளை மக்கள் அனைவரும் பார்த்து கொண்டும் பலர் பலனை அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். அதில் பின்வரும் பெரும்பாலானவர்கள் பயணத்தின் போது அவர்களுக்கான கடைசி பேருந்தை தவறவிட்டு வேறு வழியின்றி அங்கேயே தங்கியிருக்க நேரிடும் ஆகவே இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்கும் காட்சிகளை காண முடிகிறது. அதே நேரத்தில் இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் மட்டும் தங்குவதில்லை வாழ்க்கையில் நிம்மதி இழந்தோர்கள், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் அல்லது தனது குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள் என பலரது வாழ்க்கையில் நாளை பற்றிய பயத்துடன் நாள் முழுவதும் சுற்றி திரிந்து களைப்புடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வழியில்லாத நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைகின்றனர். மேலும் இதையே தொடர்ந்து செய்தும் வருகின்றனர்.
மேலும் இதன் காரணமாக உண்மையாகவே பயணிகளாக வருபவர்கள் பெரும் பயத்துடனும், பதற்றத்துடனும் இங்கு வந்து செல்கின்றனர். இவை மட்டுமின்றி சில பேருந்து வழித்தடங்களில் பெண்கள் தனியாக பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இதுதானா பாரதி கண்ட புதுமை பெண் வேண்டும் என்கிற சமுதாயம், தந்தை பெரியார் கூறிய படியா நடக்கின்றது இல்லை பெயரளவில் மட்டுமே உள்ளது. பெண்கள் சமநிலையில் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள் ஆகவே சில பேருந்து வழித்தடங்களில் எந்த ஒரு நேரத்திலும் பெண்களை தனியாக பயணிக்க அனுமதிக்கவில்லை . அவர்களுக்கு பாதுகாப்பிற்காக செய்தாலும் கூட கடைசி நேர பேருந்தில் கூட அனுமதிக்காமல் இருந்தால் பெண்களின் வாழ்க்கையில் பெரும் இன்னல்கள் நேரிடுகிறது. உதாரணமாக அடுத்த நாள் பணிக்கு செல்ல முடியாமல் போகிறது, நேர்முக தேர்விற்கு செல்ல முடியவில்லை, மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவை மட்டுமின்றி பயணத்தின் போது எடுக்கப்பட்ட பயணச்சீட்டை திரும்ப பெற்று கொண்டு மற்ற பயணிகளுக்கு விற்று பணத்தை எடுத்து கொண்டு அரசிற்கு முரண் செய்கிறார்கள். எனவே தமிழக அரசு இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. செய்தியாளர் செய்யது அலி