அரசு, தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர்..
திருப்பூரில் 10 பஸ்கல் காற்று ஒலிப்பான்கள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை திருப்பூரில் தனியார் பஸ்களில் விதிமுறையை மீறி காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளது என்ற புகார் எழுந்தது இதையடுத்து மாவட்ட கலெக்டர் வினித் உத்தரவின்பேரில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஜெயதேவர் வெங்கட்ரமணி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேலுமணி பாலசுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர் அப்போது 25 பஸ்களை ஆய்வு செய்ததில் 10 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து அந்த பஸ்களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அதிகாரிகள் அகற்றினர் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்