இருசக்கர வாகனத்தை திருடிய கைது..

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை ஒருமணி நேரத்தில் நேரத்தில் D-3 ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் கைது செய்தனர்!

D3 ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.ஆர் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் . இவர்
09/10/2021- ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள அவரது நண்பரை பார்க்க அவரது கடைக்கு வந்து தனது இருசக்கர வாகனம் கரிஷ்மா
(TN 23 BQ6376) வை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு உள்ளே சென்று தனது நண்பரை பார்த்துவிட்டு 11:00 மணி அளவில் திரும்பும்போது, நிறுத்தியிருந்த மேற்படி இருசக்கர வாகனத்தை காணவில்லை என D3 ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக இரவு 12:00 மணி அளவில் D-3 காவல் உதவி ஆய்வாளர். சிவகுமார், முதல் நிலை காவலர்
பார்த்திபன் ஆகியோர் இரவு சரகரோந்து பணியில் செல்லும் போது லாயிட்ஸ் காலனி பகுதியில் சந்தேகத்திற் கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில்
அவர் கார்த்திக் (என்கிற) கரிமுல்லா ஆ/31
எனவும் மேற்படி வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். ரோந்து பணியில் சென்ற
ஜிப்ஸி இன்சார்ஜ் சிவா
ரோந்து காவலர்கள் குமார் பிரசன்னா ஆகியோர் சம்பந்தபட்ட இடத்திற்கு சென்று திருடிய குற்ற வாளியை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் D-3 ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் கைது செய்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்டனர்.
செய்தி: இம்ரான் பம்மல் பகுதி செய்தியாளர்,