3வது அலை வாய்ப்பு குறைவே எனினும் பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்ட வேண்டாம்: விஞ்ஞானி டாக்டர் கங்காகேட்கர் எச்சரிக்கை

கோவிட் 19 தாக்கத்தின் நீண்ட நாள் பக்க விளைவுகளில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் எச்சரிப்பதால் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று கூறுகிறார். “பள்ளிகளைத் திறப்பதில் பரவலான மையம் நீக்கிய அணுகுமுறை தேவை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்து பள்ளிகளைத் திறப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

கோவிட் 19 வைரஸ் இன்ஃபுளுயென்சா வைரஸ் போல் கடைசியில் முடிந்து வெறும் காய்ச்சல், சளி என்று குறுகி விட வாய்ப்புண்டு. சீசனல் ஃப்ளூ போல் இதுவும் ஆகிவிடும் வாய்ப்புகள் அதிகம். தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வதால் பலருக்கும் நோய்குறிகள் இல்லாமலேயே நோய் தொற்றுக்கு ஆளாகலாம் அல்லது மிகவும் மிதமான நோய்க்கூறுகள் தென்படலாம், இதனால் இவர்கள் ஆர்டி பிசிஆர் உள்ளிட்ட சோதனைகளுக்கு தங்களை உட்படுத்தாமல் கூட இருப்பார்கள்.

4வது செரோ சர்வேயின் படி மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு நோய் எதிர்ப்பு ஆண்ட்டி பாடிகள் உருவாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 78% பேருக்கு ஆண்டி பாடி உருவாகியுள்ளது, கேரளாவில் 44% பேருக்கு ஆண்டி பாடி இருக்கிறது. ஆகவே பாதிக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு இருக்கிறது.

நோய்க்கான அடிப்படைக் காரணக் கர்த்தாக்களில் மக்கள் தொகை அடர்த்தி, போக்குவரத்து, புலம் பெயர்வு, கோவிட் நடத்தை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் ஆகியவை அடங்கும். இந்த காரணங்களே கூட மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். 3வது அலை உருவாகும் என்று வைத்துக் கொண்டாலும் அதன் தீவிரம் மற்றும் பரவல் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடவே செய்யும். பாதிக்கப்படும் என்று இருக்கும் பலவீனமான பகுதிகளில் 3வது அலை ஏற்படலாம்.

தடுப்பூசிகள் அதிகம்பேருக்கு போடப்போட மருத்துவமனை அனுமதி, மரணங்கள் குறையும். இருப்பினும் நாம் அதிக தொற்றுக்கள் உருவாகவே வாய்ப்பு ஏனெனில் தடுப்பூசிகளினால் நோய்க்கிருமிகளை முற்றிலும் ஒழிக்கும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவில்லை என்பதே. இந்தத் தடுப்பூசிகள் நோயை மாற்றும் தன்மை கொண்டவையே தவிர வைரஸுக்கு எதிராக முழுப்பாதுகாப்பு அளிக்கவல்லன அல்ல.

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் வாக்சின்கள் வேலை செய்கின்றன, ஆனால் தடுப்பூசிகளையும் மீறும் புதிய உருமாறிய கொரோனா வந்தால்தான் ஆபத்து” என்கிறார் ராமன் கங்காகேட்கர்.
இந்தியாவில் ஹெச்.ஐ.வி பெருந்தொற்று ஏற்பட்ட போது அதை தடுதாட்கொள்ளும் உத்திவகுப்பில் கங்காகேட்கர் சிறந்து விளங்கினார்.

அவர் மேலும் கூறுகையில், “லாம்ப்டா, மியூ, C.1.2 ஆகிய கொரோனா வகைகள் வேகமாக உருமாறி வருகின்றன. டெல்டா போல் இவை நிலைக்க முடியவில்லை. அதே போல் நோய்க்குறிகளுடைய மறு தொற்று விகிதம் 0.2% என்று வெகு குறைவாக உள்ளது. ஒவ்வொருவரும் வாக்சின் எடுத்துக் கொள்வது அவசியம் அப்போதுதான் கொரோனா வைரஸினால் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்த முடியும். முதல், இரண்டாம் அலைகளில் பாதிக்காத இடங்களில் மூன்றாம் அலை ஏற்படலாம் அதே போல் தடுப்பூசி போடாதவர்களைப் பாதிக்கலாம்.

பள்ளிகள்:

பெரியோர்களில் கோவிட் 19 காய்ச்சலின் தன்மைகளை நாம் பார்த்தோம், நீரிழிவு, உடல் பருமன், நினைவு மங்குதல், தூக்கமின்மை மற்றும் பிற பிரச்னைகளைப் பார்த்தோம். கொரோனா வைரஸ் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் தாக்கம் செலுத்தக் கூடியது. எனவே குழந்தைகளுக்கு முதலில் சிறு சிறு அடியாக எடுத்து வைக்க வேண்டும்