தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள் – அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை :

தென்காசி, கீழப்புலியூரில் அமைந்துள்ள புலிக்குட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் வாயிலாக, அப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு அடிப்படை வசதியான கழிவுநீர் வடிகால் வசதியும், சாலை வசதியும், தெருவிளக்கு வசதியும் மற்றும் குடிநீர் வசதியும் வேண்டி அரசுக்கு கோரிக்கையை வைத்துள்ளனர்.

இந்த அடிப்படை வசதியில்லாத காரணத்தால் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று எடுத்து வரும் போது இரவு நேரத்தில் பாம்புகளின் தொந்தரவும், நாய்களின் தொந்தரவும், மழை பெய்யும் காலங்களில் மழையில் நனைந்து காய்ச்சல் வருகின்றது. மேலும் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் மாலை நேரத்திற்கு மேல் வேலைக்கு சென்று வீடு திரும்புகின்றவர்களுக்கு சாலை தெரியாததால் பல முறை கீழே விழுந்து அடிபட்டு இன்னல்களுக்கு ஆளாவது குறித்து கூறுகின்றனர்.
கழிவுநீர் வடிகால் இல்லாததால் கழிவுநீர் தேங்குவதால் காய்ச்சல் ஏற்படுகின்றது.
இந்த பெருந்தொற்று காலத்திலும் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சிரமம் என்று சொல்கின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால் இப்பகுதிக்கு அருகாமையில் உள்ள பொன்வேல் சூப்பர் மார்க்கெட்டின் பக்கமாக அமைந்துள்ள தெருவில் 3 வீடுகள் மட்டுமே இருக்கின்றது அப்பகுதிக்கும் தார்சாலை உள்ளது தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி உள்ளது. ஆனால் இப்பகுதியில் மொத்தமாக 12 குடியிருப்புகளுக்கு மேலே மக்கள் தங்கள் குடும்பத்துடன் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அரசுக்கு தெரியப்படுத்தியும் சென்ற ஆட்சியில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இந்த ஆட்சியிலாவது தங்களுக்கு அடிப்படை வசதி கிடைக்குமா என்று மக்கள் ஏக்கத்துடன் அரசை நம்பியுள்ளனர்.

மேலும் தமிழக அரசின் முதல்வரான ஸ்டாலின் அவர்களுக்கு இந்த பெருந்தொற்று காலத்தில் நிவாரணம் கொடுத்ததற்கும், இலவச மளிகை பொருட்கள் கொடுத்ததற்கும் மக்கள் மகிழ்ச்சியோடு தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

இந்த நல்லாட்சியில் தங்களுக்கு நல்லது நடக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-செய்தியாளர்
செய்யது அலி.