வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் நிலக்கரி மாயம் – செந்தில் பாலாஜி புகா

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி மாயமானதை போல தூத்துக்குடியிலும் 71 ஆயிரத்து 857 மெட்ரிக் டன் காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, தான் அமைச்சராக இருந்த போதே வடசென்னையில் நிலக்கரி இருப்பை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அது தொடர்பாக ஆய்வு செய்ய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தங்கமணியின் கேள்விக்கு தன்னுடைய பதிலுரையில் பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது இருப்பு கணக்கை விட நிலக்கரி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் முதல்கட்ட தகவலின்படி 2 லட்சத்து 38 ஆயிரத்து 437 மெட்ரிக் டன் காணவில்லை என்ற தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இருப்பை விட 71 ஆயிரத்து 587 மெட்ரிக் டன் நிலக்கரி குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தன் பதிலுரையில் தெரிவித்தார்.