டீ கடையில் மணமகள் தேவை போர்டு..

டீ கடையில் மணமகள் தேவை போர்டு வைத்த மாப்பிள்ளைக்கு அதிக வரன்கள் வருகின்றன…

கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில் வீட்டுக்கு அருகே ஒரு லாட்டரி கடை வைத்தேன். பிறகு அதை டீக்கடையாக விரிவுப்படுத்தினேன். தற்போது வியாபாரம் நன்றாக போகிறத. எனது ஜாதகத்தை வைத்து கொண்டு உறவினர்கள் வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த வரனும் அமையவில்லை. இதனல் என் டீக்கடை முன் போர்டு வைக்க முடிவெடுத்தேன்” என்றார். டீக்கடை முன் வைக்கப்பட்ட போர்டை உன்னியின் நண்பர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.