ஓபிஎஸ் இபிஎஸ் மனு தள்ளுபடி..

தனி நீதிமன்றம் ஓபிஎஸ் இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்த குற்றவியல் அவதூறு மான நஷ்ட வழக்கில் நேற்றைய தினம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து இன்றைய தினம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திரு பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் தனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது அவர்கள் ஆகஸ்ட் 24 இன்று ஆஜராகாமல் அவர்களது சார்பில் வழக்கறிஞர்கள் 317 மனுவினை தாக்கல் செய்து ஆஜர் ஆகாமல் இருக்க அனுமதி கூறினார்கள் வர இயலவில்லை என்று கூறினார்கள் அதனை ஏற்க மறுத்த தனி நீதிமன்றம் அவர்களது மனுவை தள்ளுபடி செய்து அவர்கள் இருவரும் கண்டிப்பாக செப்டம்பர் 14 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார் திரு எடப்பாடி கே பழனிசாமி திரு ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் அளித்த மனுவை நீதிபதி ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார் வா.புகழேந்தி சார்பில் வழக்கறிஞர்கள் திரு திருமூர்த்தி அவர்களும் திரு இம்ரான் அவர்களும் ஆஜரானார்கள். செய்தி : சையது