அமைச்சர் ஆய்வு செய்தார்.
மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 154-வது வார்டில் கடந்த ஆட்சியில் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை சார்பாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற முறையில் குடியிருப்போருக்கு பேராபத்து விளைவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக ஆதரபூர்வமாக புகார் வந்த நிலையில், மாண்புமிகு முதல்வரின் ஆணைப்படி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படி,நேற்று (24.08.2021) சம்மந்தப்பட்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய மக்கள் சேவகர் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அக்கட்டிடத்தில் குடியிருக்கும் நபர்கள், கட்டிடம் தரமற்று விபத்து ஏற்படும் வண்ணம் உள்ளதாகவும், தரமற்ற கட்டுமானம் மற்றும் இணைப்புகளை சீரமைத்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அம்மக்களின் நியமான கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதற்கான துறை அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.உடன் மாவட்ட அமைப்பாளர் ராமாபுரம் வ. செல்வகுமார், வட்ட கழக செயலாளர்கள் மூன்லைட்T.ரவி,K.ராஜி, மாவட்ட பிரதிநிதி ராதாசெல்வம் மற்றும் மாவட்ட பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தி : ஜெபஸ்டின்