பழுதடைந்த மின்கம்பத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

பழுதடைந்த மின்கம்பத்தை சரிசெய்ய மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை.
மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் முனியப்பன்கோவில்க்கு எதிரே மின்கம்பம் பழுதடைந்தது. மிக மோசமான நிலையில் உள்ளது, பொதுமக்கள் அதிகம் வசிக்ககூடிய இந்த பகுதியில் அந்த மின்கம்பத்தில் தெருவிளக்கும் எரியவில்லை, கோவிலுக்கு வரகூடிய பக்தர்களும், பொதுமக்களும் வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பழுதடைந்த மின்கம்பத்தை மின்சார வாரியம் உடனே தலையிட்டு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்