டெஸ்ட் அணியிலிருந்து மொயின் அலி விடுவிப்பு – இங்கிலாந்தின் அதிரடி முடிவு!!!

இங்கிலாந்து டெஸ்ட் அணியிலிருந்து ஆல்-ரவுண்டர் மொயின் அலி விடுவிக்கப்பட்டுள்ளார்.

லாரட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோற்ற பின் இங்கிலாந்து அணி ஆச்சரியமான முடிவை ஒன்றை எடுத்துள்ளது. ஆல்-ரவுண்டர் மொயின் அலியை அணியிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுவித்துள்ளது. மொயின் அலி பிரிட்டனில் நடைபெறும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்பட்டு அவர் டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

100 பந்து கிரிக்கடெ் போட்டி தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணிக்கு மொயின் அலி கேப்டனாக உள்ளார். பர்மிங்காம் அணி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது. நூறு பந்து கிரிக்கெட்  இறுதி போட்டி ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற உள்ளது. பர்மிங்காம் அணி இறுதிப்போட்டியில் யாரை எதிர்கொள்ளும் என்பது வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள எலிமினெட்டர் சுற்றுக்கு பின் தெரியும்.

மொயின் அலியை தவிர கிரெய்க் ஓவர்டனும் இங்கிலாந்து டெஸட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் லீட்ஸ் நகரில் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்காக டி20 ஸ்டார் டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார். மலான் இதற்கு முன்பாக 15 டெஸ்ட் போட்டிகளில் 724 ரன்கள் எடுத்தார். 2018-ல் இந்தியாவுடன் பர்மிங்ஹாமில் கடைசியாக டெஸ்ட்டில் ஆடியிருந்தார்.