சிலந்திகள் வாரம்:உழவனின் நண்பன் சிலந்தி பற்றிய அரிய தகவல்கள்!

சிலந்திகள் எப்போதும் அதிகாலை அல்லது மாலை நேரத்தில்தான் வலை பின்னுகின்றன. இந்த நேரத்தில் பூச்சிகள் அதிக அளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்கவே இந்த நேரத்தில் வலை பின்னுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 14 முதல் 22ம் தேதிவரை சிலந்திகள் வாரமாக கடைபிடிக்கப்படும் நிலையில் சிலந்தி குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.

பூமியின் 50 ஆயிரம் வகையிலான சிலந்திகள் உள்ளன. இவற்றுள், 1,800 வகை சிலந்திகள் இந்தியாவில் காணப்படுகின்றன. எட்டுக்கால் பூச்சி என்றழைக்கப்படும் சிலந்திக்கு எட்டுக்கால் என்று எல்லோரும்  சொல்லிவிடுவார்கள். ஆனால்,  சிலந்திக்கு, 6 முதல், 8 கண்கள் வரை உள்ளன. *சிலந்தி பூச்சி* என்று அழைத்தாலும் அவை பூச்சி இனத்தில் சேராது என்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள் . காரணம், உணர்வுக் கொம்புகளோ, இறக்கைகளோ கிடையாது என்பதால், சிலந்தி பூச்சி இனத்தில் சேராது என்பது அவர்களின் கூற்று.

சிலந்திகளில் கடும் விஷத்தன்மை உடையவையும்  உண்டு; ப்ளேக் விடோ, ப்ரவுன் ரெக்கள்ஸ் என்ற சிலந்திகள் கடித்தால் விஷம் ஏறும். ;இத்தகைய விஷச்சிலந்திகள், வட, தென் அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகின்றன.

ஆண் சிலந்தியை விட, பெண் சிலந்தி உருவம், எடையில் பெரியதாக இருக்கும். சிலந்திக்கு, விஷப்பை, உடலை விட்டு வெளிப்பகுதியில் அமைந்திருக்கிறது. உடல், இரு பகுதியாக காணப்படுகிறது. சிலந்திகள் மிகவும், நுண் அறிவு உள்ளவை. சிலந்திகள் எப்போதும் அதிகாலை அல்லது மாலை நேரத்தில்தான் வலை பின்னுகின்றன.  இதற்கு முக்கிய காரணம் உண்டு; இந்த நேரத்தில் தான், பூச்சிகள் அதிக அளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்கவே இந்த நேரத்தில் வலை பின்னுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.