மொஹரம் பண்டிகை: பாரம்பரிய வரலாற்றை கொண்ட ஆஷூரா தினத்தின் கதை!

புராணங்களின் படி, மெக்காவில் இஸ்லாமியம் தொடர்பான செய்தியைப் பரப்ப அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஹஜ்ரத் அலியின் மகனும் நபியின் பேரனுமான இமாம் ஹுசைன் இஸ்லாமிய தூராக மதத்தின் புனிதத்தை பரப்ப தொடங்கினார். மேலும் மொஹரம் 10 வது நாளில் அவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது. 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார்.

இந்தியாவில் மொஹரம் மாதம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆஷுரா நாளாகும். மொஹரம் மதத்தின் 10 வது நாளைத்தான் `ஆஷூரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. ஆஷூரா எனும் அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்றுதான் பொருள். ஹுசைன் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் விடப்பட்டு எதிரி வீரர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளை இது குறிக்கிறது. இந்த நாளில் தான் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இம்மாதத்தின் பிறை 9, 10 ஆகிய தினங்களில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள்.

மதீனாவில் நபிகளாரும் முஸ்லிம்களும் மொஹரம் மாதத்தின் பத்தாவது நாள் ஆஷூரா நோன்பிருந்த சமயத்தில்தான் யூதர்களும் நோன்பு வைக்கிறார்கள் என்ற ஒரு சங்கதி தெரிய வந்தது. இஸ்லாமிய இறைத்தூதர்களை இம்சித்து கொலை செய்யும் யூதர்கள் வெற்றுச் சடங்காக நோன்பை வைத்து திருப்தியடைவதை பார்த்தபோது, அவர்களைவிட பல மடங்கு உண்மையான விசுவாசத்துடன் நபி மூஸாவை நேசித்து மரியாதை செய்கின்ற தாமும் முஸ்லிம்களுமே, எனேவ இந்நோன்பை அதிக விருப்பத்துடன் அனுசரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நபிகளார் வந்தார்.அதே சமயம், அவர்களுக்கு ஒப்பாக தம்முடைய வழிபாட்டை நடத்துவதில் உடன்பாடு அற்றவர்களாகவும் இருந்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு இரண்டு நாள் நோன்பை வழிமுறை நபிகள் உருவாக்கினார். ஆஷூரா என்றால் பத்தாவது நாளைத்தான் குறிக்கும் என்றாலும், `இனி ஒன்பதிலும் நான் நோன்பு நோற்பேன்’ என்று உறுதியளித்தார். அன்றிலிருந்து முஸ்லிம்கள் ஆஷூரா நோன்பை இரண்டு நாள்களாக அனுசரிக்க இதுவே காரணம்.