குறைந்தது தங்கத்தின் விலை
உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,470க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.56 குறைந்து ரூ.35,760-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.