தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு

17.08.2021
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில்
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு
மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்ற மரத்தான் ஒட்டப்பந்தயம் நடைபெற்றது.
இதனை விசிக மாநில துணை பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி துவக்கி வைக்க, நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சூர.இராஜ்குமார் தலைமை வகிக்க ஒன்றிய செயலாளர் விடுதலைநெஞ்சன் ஒருங்கிணைக்க, மண்டல செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், தொகுதி செயலாளர் இளையவளவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் முதல் வெற்றியாளருக்கு ரூ.10,0000, இரண்டாம் வெற்றியாளருக்கு ரூ.7000, மூன்றாம் வெற்றியாளருக்கு ரூ.5000, நான்காம் வெற்றியாளருக்கு ரூ.3000, ஐந்தாம் வெற்றியாளருக்கு ரூ.2500 ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. செய்தியாளர் சி. கவியரசு