ஐ.எஸ். தீவிரவாதிகள் உட்பட 24 இந்தியர்களை விடுவித்த தாலிபான்!
தாலிபான்கள் இந்திய அரசால் தேடப்படும் 8 தீவிரவாதிகள் உட்பட 24 இந்தியர்களை விடுவித்துள்ளனர். இவர்கள் இந்தியாவிற்குள் நுழையக் கூடிய வாய்ப்பு உள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்படுபவர்கள் என அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 8 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட 24 இந்தியர்களை தாலிபான்கள் விடுவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டின் பெயரை 20 ஆண்டுகளுக்கு முன்பு அழைக்கப்பட்டது போன்று ”ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்” என மாற்றியுள்ளனர். நாட்டின் புதிய அதிபராக முல்லா அப்துல் கனி பராதர் அறிவிக்கப்பட்டுள்ளார். காபூலில் உள்ள பெரும்பாலான சோதனைச் சாவடிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தாலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர்.