800 பேரை ஆப்கானிலிருந்து
விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்தால், ஆப்கானிஸ்தானின் கொடூரத்தையும் அங்கிருந்து வெளியேற மக்கள் காட்டும் அவசரத்தையும் எளிதில் யூகிக்க முடிகிறது.
90-களில் தாலிபான் ஆட்சி இருந்தபோது அனுபவித்த கொடுமைகளை ஆப்கானிஸ்தான் மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் தாலிபான் கைகளில் முழுமையாக அதிகாரம் செல்வதற்கு முன்பு அவர்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்.
காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து மக்கள் கூட்டம் காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் (Afghanistan) மக்களின் நிலையை விவரிக்கும் ஒரு படம் சமீபத்தில் வைரலானது. இதில் பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணிப்பது போல, பறக்கத் தொடங்கிய விமானத்தில் தொங்கிய மூன்று பேர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தனர். இந்த காட்சி உலகெங்கிலும் உள்ள மக்களை பதபதைக்க வைத்துள்ளது.
விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது
இப்போது அதே விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்தால், ஆப்கானிஸ்தானின் கொடூரத்தையும் அங்கிருந்து வெளியேற மக்கள் காட்டும் அவசரத்தையும் எளிதில் யூகிக்க முடிகிறது.