மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்தியா

இந்திய வீரர் திலீப் வெங்சர்கார் லார்ட்ஸ் மைதானத்தில் 3 முறை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளுக்குமிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் நங்கூர தொடக்கத்தை ஏற்படுத்தினர். கே.எல்.ராகுல் அபாரமான சதம் அடித்தார். ரோகித் சர்மா சதம் அடிக்கும் முன்னரே விக்கெட்டை இழந்தார். அதன்படி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை குவித்தது இந்திய அணி.