பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில், பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47 என்ற விலைக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றம் ஏதும் இல்லை.