மணப்பாறை பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞர் கைது 17 வாகனங்கள் பறிமுதல்?

மணப்பாறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 வாகனங்களை பறிமுதல் செய்தனர், தொடர் வாகன திருட்டு சம்மந்தமாக காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் செல்லப்பா, தலைமை காவலர் இளங்கோவன், உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் விசாரித்து வந்தனர், இந்த நிலையில் நொட்ச்சிமேடு பகுதியில் நடைபெற்ற வாகன தணிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் மருங்காபுரி வட்டம் ஊத்துக்குளி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் மகன் கார்த்திகேயன் (23) என்பதும் அவர் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது, இதை அடுத்து அவர் ஒட்டி வந்த வாகனம் மற்றும் ஊத்துகுளியில் பதுக்கி வைத்து இருந்த 16 இருசக்கர வாகனங்கள் என 17 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரிக்கின்றனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்