நாக பஞ்சமி விரதம்…

நாக பஞ்சமி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுக்லா பட்சத்தின் (வளர்பிறை) ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுகிறது.

நாக பஞ்சமி வழிபாடு முறை
விட்டை சுத்தம் செய்து, நாக பஞ்சமி அன்று அதிகாலையில் குளித்து நாக பஞ்சமி விரதம் தொடங்க வேண்டும்.
கோயிலில் உள்ள நாகர் சிலைக்கு மஞ்சள், பால் அபிஷேகம் செய்வதோடு, வீட்டிலேயே சிறிய வெள்ளியால் செய்யப்பட்ட அல்லது செம்பில் செய்த நாகருக்கு பூஜை செய்து வழிபடவும். இந்த பூஜை பெண்கள் செய்வதால் தன் கணவன், குழந்தைகளின் ஆரோக்கியம், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள்  தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ  பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

பூஜை முடித்த பின்னர் கோயிலுகுக்கு சென்று வழிபட்டு, நாக தேவர்களை வணங்கி வீட்டில் பூஜித்து உங்கள் விரதத்தை முடிக்கலாம். இந்த பூஜை செய்ததால் செல்வத்தையும் செழிப்பையும் பெற முடியும், மேலும் கால சர்ப தோஷம் நீங்கும்.