விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் இலக்கை எட்டவில்லை

விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, திட்டமிட்டபடி ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் கிரையோஜெனிக் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோளாறு ஏற்பட்டதால் செயற்கை கோளை கொண்டு செல்லும் இலக்கை எட்டவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.