தாலிபான்கள் வசமாகும் ஆப்கான்

ஆப்கானிஸ்தானை முழுமையாக  தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தாலிபான்கள், தொடர்ந்து பொது மக்கள் மீதும் வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற எந்த முடிவும் உத்தரவும் இல்லை என்று  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், திடீரென வெளியேற்றுவதற்கு வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்தால், அமெரிக்க ராணுவத்தினர் உதவியுடன் எவ்வாறு தாயகம் அழைத்து செல்ல வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று ஒரு அதிகாரி கூறினார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி (John Kirby), தூதரக் அதிகாரிகளை அங்கிருந்து அழைத்து வருவதற்கான திட்டம் பற்றி ஆலோசிக்கப்படவில்லை மறுத்துவிட்டார், ஆனால்  அமெரிக்க நாடாளுமன்ற அதிகாரி இது குறித்து கூறுகையில், ஆப்கானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை, தாயகம் அழைத்து வருவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் நடத்திய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.