காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர், தனது கணக்கை ‘லாக்’ செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டது. 

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் (Twitter), தனது கணக்கை ‘லாக்’ செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டது. ஸ்கிரீன்ஷாட்டில், “உங்கள் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது” என்ற செய்தி இருந்தது.

“இந்த கணக்கு ட்விட்டர் விதிகளை மீறியது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம். குறிப்பாக, தனிப்பட்ட தகவல்களை பதிவிடுவதற்கு எதிரான எங்கள் விதிகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அங்கீகாரம் மற்றும் அனுமதியின்றி நீங்கள் வெளியிடவோ அல்லது பதிவிடவோ கூடாது” என்று ஸ்கிரீன்ஷாட்டில் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.