5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்ட ர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) மற்றும் ட்விட்டர் (Twitter) தலைவர் ஜாக் டோர்சே (Jack Dorsey ) ஆகியோர் இந்த ட்விட்டர் முடக்க நடவடிக்கைக்கு காரணம் என்று கட்சியில் தகவல் தொடர்பு துறைக்கு பொறுப்பு வகிக்கும் AICC செயலர் குற்றம் சாட்டினார். “காங்கிரஸ் தனது கடும் கண்டணத்தை பதிவு செய்தவதோடு, தனது கட்சிக்கும் எதிரான நடவடிக்கைக்களை எதிர்த்து போராடும் என்று உறுதியளிக்கிறது” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நெருக்குதல் காரணமாகத் தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. முன்னதாக, டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒன்பது வயது சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தும், அந்த புகைப்படங்களை ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டிருந்தார்.