நாமக்கல்லில் காசோலையை கொடுக்க முன்வந்த இளைஞர்

     நாமக்கல்லில் காந்தியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இளைஞர் ஒருவர் ரூபாய் 2.63லட்சத்து 63 ஆயிரம் கடன் தொகையை செலுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசோலையை வழங்க முன்வந்தார்
   
 தமிழக நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன். அவர்கள் திங்கள்கிழமை அரசு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதில் தமிழக அரசுக்கு ரூபாய் ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து நாமக்கல்லில் மேற்கு பட்டியை சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூபாய் 2.63 லட்சம் கடன் தொகைக்குரிய காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார் கோட்டாட்சியர் மு. கோட்டை குமார் அந்த இளைஞர் வழங்கிய காசோலை அட்டையை வாங்க மறுத்துவிட்டார்.மாவட்ட ஆட்சியாரை நேரில் சந்தித்து வழங்குமாறு அவர் தெரிவித்து விட்டார்.இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் சென்றார். இளைஞர் ரமேஷ் வழங்கிய காசோலை அட்டையை மாவட்ட ஆட்சியரும் ஏற்க மறுத்துவிட்டார்.

செய்தி பீர்முகமது திருப்பூர்