ஆப்கனில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வரும் பத்ரிகையாளர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர்களின் இருப்பிடம், செல்லும் இடம் குறித்த தகவல்களை இந்திய தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமான சேவை நிறுத்தப்படும் முன்னர் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் தங்களின் நிறுவனங்களிடம் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும், ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வரும் பத்ரிகையாளர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர்களின் இருப்பிடம், செல்லும் இடம் குறித்த தகவல்களை இந்திய தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.