கோல்டன் விசா வழங்கி கவுரவித்த துபாய் அரசு.

ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். 

 துபாயில் 20 கோடிக்கு மேலான முதலீடை செய்பவர்களுக்கு கோல்டன் ஸ்டார் விசா (Golden Visa) வழங்கப்படுகின்றது. ஆனால், முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். 

துபாய் நாடு, அங்கு அதிக முதலீடுகளை செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய கவுரவ விசாக்களை வழங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இப்படிப்பட்ட கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.