நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திருமண ஆசைகாட்டி நடிகர் ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டதாக ஜெர்மனி பெண் புகார் அளித்துள்ளார்.  

இது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் விசாரணையின் போது நீதிபதிகள் ஆர்யாவின் மீதான புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்களைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து ஜெர்மனி பெண் தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பினார்கள். அதன்பேரில் நடிகர் ஆர்யா மத்திய குற்றப்பிரிவு போலிசார் முன்பு ஆஜரானார்.

இந்நிலையில் அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். நடிகர் ஆர்யா தன்னை விட 17 வயது இளையவரான நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.