வேற லெவல் கமிட்மெண்ட், ரூ. 2,63, 976.
வெள்ளை அறிக்கையில் உள்ள தகவலின்படி தமிழகத்திற்கு ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய். 2,63,976 கடன் சுமை கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெள்ளை அறிக்கையில் 2006-2011 ஆம் ஆண்டில் இருந்த உபரி வருமானம் தற்போது சரிந்து விட்டது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். கடைசி 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை என்றும், அதனால் ஏற்பட்ட 3 லட்சம் கோடி பொதுக் கடனில் சரிபாதி தினச் செலவு என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கும் இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று நிறைவடையும் என்றும், பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெறும் எனவும் அதைத் தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.