குடிநீருக்கு தவிக்கும் பாகிஸ்தான் நகரங்கள்.

பாகிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பெரும் பிரச்சனை உள்ளது.

ஜூலை மாதம், நாடாளுமன்ற தேசிய சுகாதார சேவைகளின் செயலாளர் டாக்டர். நவுஷீன் ஹமீத், பாகிஸ்தானின் தனிநபர் நீர் இருப்பு 1947 ல் 5,600 கன மீட்டராக இருந்து என்றும், 2021 இல் அது சுமார் 1,038 கன மீட்டராக, அதாவது 400 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.

இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும் என நவுஷீன் தெரிவித்தார். உலகளவில் அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானில், தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாகும் என்றார் அவர்.