வெளிநாட்டை சேர்ந்தவர்களும் செலுத்திக்கொள்ள அனுமதி.

இந்தியாவில் தங்கியுள்ள பிற நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள  மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக அவர்கள் கோவின் தளத்தில் பதிவு செய்யவேண்டும். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவில் தொடங்கவும் அரசு முனைப்பு காட்டி வருகிறது.  இந்நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள பிற நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள  மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.