இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்.

முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் நீங்கலாக, மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின. இந்த சூழலில் அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்றுமுதல் தொடங்குகின்றன.

இந்த அறிவிப்பு முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் நீங்கலாக, மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.