தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு.
20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) சமர்ப்பிக்கப்போகும் வெள்ளை அறிக்கையில் சில முக்கிய அம்சங்களை கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். அதில், தமிழ்நாட்டின் கடன் சுமை எவ்வளவு என்ற தகவல் தெரியவரும்.
இந்த பட்ஜெட் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மக்களின் சுமையை அதிகரிக்காத வண்ண இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.