மலையாள நடிகர் பகத் பாசில் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.எனவே தனது கணவருக்கு க்யூட்டாக வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் நஸ்ரியா.

நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி இப்படி ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தார்.

இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.2014 ஆம் ஆண்டு வெளியான ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் மலையாளம் மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.அந்த திரைப்படம் பின்பு தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.

மலையாளத்தில் பன்முக திறமைக்கொண்ட நடிகராக வலம் வரும் பகத் பாசிலை 2014 ஆம் ஆண்டு நஸ்ரியா திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அடிக்கடி நஸ்ரியா இன்ஸ்டாவில் பதிவிடுவார்.

இந்நிலையில் பகத் பாசில் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.அதற்கு வாழ்த்து கூறி நடிகை நஸ்ரியா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘எப்போதும் புகைப்படத்தில் out of focus-ல் இருக்க விரும்புவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’.உங்களுடைய எல்லா கனவும் நிஜமாகட்டும்’ என்று க்யூட்டாக பதிவிட்டுள்ளார் நஸ்ரியா.

About The Author