முக அழகைக் கெடுக்கும் சருமத் துகள்கள் : வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம்..

சருமத்தின் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகளின் அதிகப்படியான செயல்பாட்டின் காரணமாக சருமத்தில் ஓபன் போர்ஸ் எனப்படும் சரும துளைகள் பிரச்சனை ஏற்படுகிறது.

சரும துளைகள் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இது சருமத்தின் அழகை கெடுக்கிறது. மேலும் உங்கள் சரும தோலின் அமைப்பை தடிமனாக மாற்றுகிறது. எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. சருமத்தின் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகளின் அதிகப்படியான செயல்பாட்டின் காரணமாக சருமத்தில் ஓபன் போர்ஸ் எனப்படும் சரும துளைகள் பிரச்சனை ஏற்படுகிறது.

நாளடைவில் சருமத்தில் ஏற்படும் தளர்வுகள் காரணமாக இந்த போர்ஸ் மேலும் விரிவடைகிறது. இதனால் சருமத்தில் ஆங்காங்கே குழிகள் போல காட்சியளிக்கும். இதனை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்து விடலாம். டோனிங், ஸ்க்ரப் மற்றும் பேஸ் பேக் ஆகியவற்றின் மூலம் இதனை சரி செய்யலாம். எனினும் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை கொண்டே இதனை சரி செய்ய முடியும் என அழகுக்கலை நிபுணர் ஷாஹனாஸ் ஹுசைன் கூறுகிறார். அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்

ஐஸ் கட்டிகள் : ஐஸ் கட்டிகள் சரும பராமரிப்பிற்கு முக்கிய பங்காற்றுகிறது. முதலில் உங்கள் முகத்தை சுத்தப்படுத்திய பின், ஐஸ் கட்டிகளை சுத்தமான ஒரு துணியில் வைத்து திறந்த துளைகள் உள்ள பகுதிகளில் சில நொடிகள் மெதுவாக தடவவும். இது துளைகளை மூட உதவுகிறது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள துளைகள் இறுகி விரைவில் சரியாகும். ஐஸ் கட்டி கொண்டு முகத்தை தேய்க்கும் போது இந்த துளைகள் சுருங்கி அழுக்கு வெளியேறி முகம் பொலிவு பெறும்.

ஆப்பிள் சிடர் வினிகர்: ஆப்பிள் சிடர் வினிகர் முகப்பருக்களை போக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதில் கந்தகம் இருப்பதால் சருமத்தை இறுக்கமடைய செய்து சுருக்கங்களை குறைக்க உதவும். மேலும் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் துணைபுரியும். அரை கப் ஆப்பிள் சிடேர் வினிகரை நான்கு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும். அதில் பஞ்சை முக்கி சருமத்தில் தடவி மசாஜ் செய்துவரவும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் சரும அழகு மேம்படுவதை காணலாம்.

எலுமிச்சை சாறு :  சரும துளைகளை மூட ஆஸ்ட்ரிஜென்ட்கள் உதவுகின்றன. எலுமிச்சை சாற்றில் இவை அதிகம் இருப்பதால் உங்கள் சருமத்திற்கு இதனை பயன்படுத்தலாம். வெறும் எலுமிச்சை சாற்றை மற்றும் பயன்படுத்துவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், ரோஸ் வாட்டர் உடல் கலந்து பயன்படுத்துவது நல்லது. ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை எடுத்து சம அளவு கலந்து உங்கள் சருமத்தில் தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவவும். ரோஸ் வாட்டர் ஒரு இயற்கையான டோனராக இருப்பதால் இது உங்கள் சரும துளைகளை மூடுகிறது.